செஞ்சி அருகே ஃபெஞ்சல் புயல் மழையில் பாதிக்கப்பட்ட 65 குடும்பங்களுக்கு, அதேகொம் தொண்டு நிறுவனம் சார்பில் நிவாரண பொருட்கள் வழங்கல்!

ஃபெஞ்சல் புயல் மழையில் பாதிக்கப்பட்ட நரிக்குறவர் மற்றும் பழங்குடியினர் மக்கள் 65 குடும்பங்களுக்கு அதேகொம் தொண்டு நிறுவனம் சார்பில் நிவாரண பொருட்கள் வழங்கப்பட்டது.

விழுப்புரம் மாவட்டம் செஞ்சி அருகே ஃபெஞ்சல் புயல் மழையில் பாதிக்கப்பட்ட கலையூர் ஊராட்சிக்குட்பட்ட பகுதியில் வசிக்கும் நரிக்குறவர் இன மக்கள் 40 குடும்பங்களுக்கு அதேகொம் தொண்டு நிறுவனம் சார்பில், டிச.19 வியாழனன்று உணவு பொருட்கள் அடங்கிய தொகுப்பினை நிறுவனர் சீனு பெருமாள், வருவாய் ஆய்வாளர் ஜெய்கணேஷ் ஆகியோர் வழங்கினர்.

இதைத்தொடர்ந்து அஞ்சாஞ்சேரி ஊராட்சிக்குட்பட்ட கோணமலை பகுதியில் வசிக்கும் புயல் மழையில் பாதிக்கப்பட்ட பழங்குடியின மக்கள் 25 குடும்பங்களுக்கு பாய் மற்றும் போர்வைகள் வழங்கப்பட்டது.

இதில் களையூர் ஊராட்சி மன்ற தலைவர் விமலா பழனி, திருவம்பட்டு ஊராட்சி மன்ற தலைவர் முருகன், மேல்எடையாளம் கிராம நிர்வாக அலுவலர் சரவணன் ஆகியோர் கலந்து கொண்டனர். நிகழ்ச்சியினை செஞ்சி அதேகொம் பெண்கள் கண்ணியமைய ஒருங்கிணைப்பாளர் ஜான் போஸ்கோ, தன்னார்வலர் சந்தியா ஆகியோர் ஏற்பாடு செய்திருந்தனர்.

விழுப்புரம் மாவட்ட செய்தியாளர்: தமிழ். மதியழகன்.

Post a Comment

புதியது பழையவை