விழுப்புரம் மாவட்டம் செஞ்சி காந்தி பஜாரில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் ஞாயிறன்று (டிச.08) தமிழக பாட்டாளி கட்டுமானம், அமைப்புசாரா மற்றும் ஆட்டோ தொழிற்சங்கம் சார்பில் விழுப்புரம் மாவட்ட செயற்குழு கூட்டம் மாவட்ட செயலாளர் திருமலை தலைமையில் நடைபெற்றது.
இதில் சிறப்பு அழைப்பாளராக மாநில தலைவர் இரா. மேகநாதன் கலந்து கொண்டு சங்கத்தை வளுப்பெற உறுப்பினர்களை சேர்க்கவும், மாவட்டம் முழுவதும் சங்கத்தின் கிளைகள் உருவாக்குவது குறித்தும் ஆலோசனைகளை வழங்கினார்.
செயற்குழு கூட்ட நிகழ்வில் ஆட்டோ சங்க மாநில பொருளாளர் பாலசுந்தரம், தொழிற்சங்க மாநில செயற்குழு உறுப்பினர் ராஜேந்திரன், மாவட்ட தலவர் வெங்கடேசன், மாவட்ட பொருளாளர் சீனுவாசன், செஞ்சி ஆட்டோ தொழிற்சங்கம் சுதாகர் மற்றும் நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.
விழுப்புரம் மாவட்ட செய்தியாளர். தமிழ். மதியழகன்.
கருத்துரையிடுக