செஞ்சியில் சமூக நீதி கூட்டமைப்பு சார்பில், மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவை கண்டித்து கண்டன ஆர்ப்பாட்டம்!



செஞ்சியில் சமூக நீதி கூட்டமைப்பு சார்பில், மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவை கண்டித்து கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

விழுப்புரம் மாவட்டம் செஞ்சி திருவண்ணாமலை சாலை இந்தியன் வங்கி எதிரில் சமூக நீதி கூட்டமைப்பு சார்பில், அம்பேத்கர் மக்கள் கட்சி தலைவர் மழைமேனிபாண்டியன் தலைமையில் நாடாளுமன்றத்தில் சட்ட மாமேதை அம்பேத்கர் அவர்களை மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா அவமரியாதை செய்ததை கண்டித்தும், நாடாளுமன்ற எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி மீது வழக்கு பதிவு செய்யப்பட்டதை கண்டித்தும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

 ஆர்ப்பாட்டத்தின் போது மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவை கண்டித்தும், அவர் பதவி விலகக் கோரியும், மத்திய அரசை கண்டித்தும் கண்டன முழக்கங்கள் எழுப்பப்பட்டது. இந்த ஆர்ப்பாட்டத்தில் சமூக நீதிக் கூட்டமைப்பில் அங்கம் வகிக்கும் பல்வேறு அமைப்பை சார்ந்த நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

விழுப்புரம் மாவட்ட செய்தியாளர் தமிழ். மதியழகன்.

Post a Comment

புதியது பழையவை