ஜகமாளும் ஜகத் ஜனனி சிறப்பு அலங்காரத்தில் மலையனூர் அங்காளி!

 

விழுப்புரம் மாவட்டம் பிரசித்தி பெற்ற மேல்மலையனூர் அருள்மிகு ஸ்ரீ அங்காள பரமேஸ்வரி அம்மன் ஆலயத்தில் மார்கழி மாத மாகாளய அமாவாசையை முன்னிட்டு திங்கட்கிழமை(டிச.30.2024) இன்று மூலவர் மற்றும் உற்சவர் அங்காளம்மனுக்கு சிறப்பு அபிஷேக அலங்காரம் செய்து தீபாராதனை ஏற்றப்பட்டது. உற்சவர் அங்காளம்மன் பல்வேறு மலர்களால் அலங்கரிக்கப்பட்டு ஜகத்தை ஆலும் ஜகத் ஜனனி சிறப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு காட்சி, ஆயிரக்கணக்கான பக்தர்கள் சாமி தரிசனம் செய்து வருகின்றனர். மேலும், இன்று இரவு 10.30 மணிக்கு மேல் ஊஞ்சல் உற்சவம் நடைபெற உள்ளது. பக்தர்கள் வசதிக்காகவேண்டி பல்வேறு பகுதிகளில் இருந்து மேல்மலையனூருக்கு அரசு போக்குவரத்து துறை சார்பில் சிறப்பு பேருந்துகள் இயக்கப்படுகின்றன.

விழுப்புரம் மாவட்ட செய்தியாளர்: தமிழ். மதியழகன்.

Post a Comment

புதியது பழையவை