விழுப்புரம்: மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் திருவள்ளுவர் சிலை! மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார் ஆட்சியர்!!

 

விழுப்புரம்: கன்னியாகுமரி மாவட்டத்தில், முக்கடல் சங்கமிக்கும் குமரி முனையில் 133 அடி உயர திருவள்ளுவர் சிலை 25 ஆம் ஆண்டு வெள்ளி விழாவினை முன்னிட்டு,  விழுப்புரம் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாக பூங்காவில், செய்தி மக்கள் தொடர்புத்துறை சார்பில், வைக்கப்பட்டுள்ள மாதிரி திருவள்ளுவர் திருவுருவச்சிலைக்கு இன்று (31.12.2024) மாவட்ட ஆட்சித்தலைவர் டாக்டர் சி. பழனி மலர்மாலை அணிவித்து, மரியாதை செலுத்தினார். உடன் மாவட்ட வருவாய் அலுவலர் கி. அரிதாஸ், மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (பொது) யோகஜோதி, செய்தி மக்கள் தொடர்பு அலுவலர் பெ. சதீஷ், விழுப்புரம் வருவாய் வட்டாட்சியர் கனிமொழி உட்பட பலர் கலந்து கொண்டனர்.

விழுப்புரம் மாவட்ட செய்தியாளர்: தமிழ். மதியழகன்.

Post a Comment

புதியது பழையவை