அனுமன் ஜெயந்தி விழா! செஞ்சிக்கோட்டை வீர ஆஞ்சநேயர் இராஜ அலங்காரத்தில் பக்தர்களுக்கு காட்சி!!

 

உலகெங்கும் வாழும் இந்துக்களால் கொண்டாடப்படும் விழாக்களில் அனுமன் ஜெயந்தி விழாவும் ஒன்று, இராமாயணம் போன்ற புராண இதிகாசங்களில் தமிழ் மாதங்களில் ஒன்றான மார்கழி மாத அமாவாசை தினத்தன்று அனுமன் எனும் ஆஞ்சநேயர் பிறந்ததாக கூறுகின்றன. இதனால் ஒவ்வொரு ஆண்டும் மார்கழி மாதம் அமாவாசை தினத்தன்று அனுமன் ஜெயந்தி விழா உலகெங்கும் உள்ள இந்துக்களால் கொண்டாடப்பட்டு வருகிறது. அந்த வகையில் விழுப்புரம் மாவட்டம் வரலாற்று சிறப்புமிக்க செஞ்சிக்கோட்டை மலையடிவாரத்தில் அமைந்துள்ள ஸ்ரீ வீர ஆஞ்சநேயர் ஆலயத்தில் மார்கழி மாத அமாவாசை அனுமன் ஜெயந்தியை முன்னிட்டு, வீர ஆஞ்சநேயருக்கு பால், தயிர், சந்தனம், பன்னீர் உள்ளிட்ட பல்வேறு வாசனை பொருட்கள் கொண்டு சிறப்பு அபிஷேக பூஜைகளும், சந்தனம் சாத்தப்பட்டு இராஜ அலங்காரம் செய்து தீபாராதனை ஏற்றப்பட்டது. இதில் செஞ்சி மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் இருந்து திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். அனைவருக்கும் அன்னப்பிரசாதம் வழங்கப்பட்டது.

விழுப்புரம் மாவட்ட செய்தியாளர்: தமிழ். மதியழகன்.

Post a Comment

புதியது பழையவை