விழுப்புரம் மாவட்டம் செஞ்சி அடுத்த மேல்களவாய் அருகே செஞ்சியை சேர்ந்த சரவணன் ஆங்கில புத்தாண்டையொட்டி மேல்தாங்கல் கோவில் விழா வியாபாரத்திற்காக, மேல்களவாய் அருகே செஞ்சி - சேத்துப்பட்டு நெடுஞ்சாலையில் தனது சிறு வணிக வளையல்(Fancy) வியாபார கடையுடன் கூடிய தள்ளு வண்டியினை தள்ளிச்சென்றுகொண்டிருந்த இருசக்கர வாகனம் மோதி விபத்துக்குள்ளானதில், செஞ்சி பெரியகரம் செல்வ விநாயகர் தெருவை சேர்ந்த ஸ்ரீராமன் மகன் சரவணன் (45), செஞ்சி கோட்டிக்கல்பாறை பகுதியைச் சேர்ந்த தங்கமணி மகன் ராஜேஷ் (25) இருவர் காயம் அடைந்த நிலையில் அப்பகுதி மக்கள் அவர்களை மீட்டு சிகிச்சைக்காக செஞ்சி அரசு பொது மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
விழுப்புரம் மாவட்ட செய்தியாளர்: தமிழ். மதியழகன்.
கருத்துரையிடுக