விழுப்புரம் மாவட்ட காவல்துறையின் சமூக நீதி மற்றும் மனித உரிமைகள் பிரிவு சார்பில், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சரவணன் அறிவுறுத்தலின் பேரில், மைலம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட சிவப்ரகாசம் சுவாமிகள் மேல் நிலை பள்ளியில் இன்று சமூக நல்லிணக்க விழிப்புணர்வு கூட்டம் நடத்தப்பட்டது.
பள்ளியின் தலைமை ஆசிரியர் வீரப்பன் தலைமையில் நடைபெற்ற இவ்விழிப்புணர்வு கூட்டத்தில், காவல் உதவி ஆய்வாளர் ரமேஷ், சிறப்பு காவல் உதவி ஆய்வாளர்கள் தமிழ்ச்செல்வன், தவமணி, முதல் நிலை காவலர் அழுகுவெல் ஆகியோர் பள்ளி மாணவ மாணவியர்களுக்கு
சமூக நீதி, மனித உரிமைகள், வன்கொடுமை தடுப்புச் சட்டம், போதை மற்றும் புகையிலை பொருட்கள் தடுப்பு, இணைய வழி குற்றங்கள் பற்றிய விழிப்புணர்வு, போக்குவரத்து விதிகளை பின்பற்றுவது தொடர்பாக விரிவாக எடுத்துரைத்து விழிப்புணர்வு ஏற்படுத்தினர். இதில் பள்ளி மாணவ மாணவிகள் மற்றும் ஆசிரியர்கள் கலந்து கொண்டனர்.
நிகழ்ச்சியினை விழுப்புரம் மாவட்ட காவல் துணை கண்காணிப்பாளர், IUCAW I/C சமூக நீதி மற்றும் மனித உரிமை பிரிவு ஏற்பாடு செய்திருந்தனர்.
விழுப்புரம் மாவட்ட செய்தியாளர்: தமிழ். மதியழகன்.
கருத்துரையிடுக