செஞ்சி திருவேங்கடகிரி கோவிந்த நாம சபா சார்பில் செஞ்சியில் இருந்து திருமலை திருப்பதிக்கு 25 ஆம் ஆண்டு வெள்ளி விழா புனித பாதயாத்திரை பயண புறப்பாடு செஞ்சி சிறு கடம்பூரில் அமைந்துள்ள ஸ்ரீ ராதா ருக்மணி சமேத கிருஷ்ணர் ஆலயத்தில் இன்று நடைபெற்றது.
திருமலை பாதயாத்திரையை முன்னிட்டு செஞ்சி சிறு கடம்பூரில் அமைந்துள்ள ஸ்ரீ ராதா ருக்மணி சமேத கிருஷ்ண பகவானுக்கு சிறப்பு அபிஷேக ஆராதனை நடைபெற்றது.
தொடர்ந்து பக்தர்கள் பாத பூஜையும் பாசுரங்கள் பாட்டியும், உற்சவமூர்த்திக்கு சிறப்பு அலங்கார ஆராதனை காண்பிக்கப்பட்டு புனித பாதயாத்திரை பயணம் தொடங்கப்பட்டது. இந்த புனித பாதயாத்திரை பயணம் இன்று சனவரி 21, தொடங்கி 26 வரை ஆறு நாள் நடை பயணமாக சுமார் 200 பக்தர்கள் கலந்து கொண்டு திருமலைக்கு சென்று திருப்பதி வெங்கடாஜலபதி பெருமாளை தரிசனம் செய்ய உள்ளனர்.
விழுப்புரம் மாவட்ட செய்தியாளர்: தமிழ். மதியழகன்.
கருத்துரையிடுக