தனியார் பள்ளியில் படிக்கும் பெண் பிள்ளைகளுக்கும் ஆயிரம் ரூபாய் நிதி அளிக்கும் தமிழ்நாடு முதலமைச்சருக்கு பாராட்டு தெரிவிப்பதாக தென்னிந்திய திருச்சபை வேலூர் பேராயத்தின் 50 வது ஆண்டு பொன்விழா நிகழ்ச்சியில் கலந்துக்கொண்ட வேலூர் பேராயர் ஹென்றி சர்மா நித்தியானந்தம் பேட்டி.
விழுப்புரம் மாவட்டம் முட்டத்தூர் பகுதியில் இயங்கி வரும் ஒய்க்காப் மேல்நிலைப்பள்ளியில் தென்னிந்திய திருச்சபை வேலூர் பேராயத்தின் ஐம்பதாவது பொன்விழா ஆண்டின் கொண்டாட்டமாக நிறைவு பெற்ற நலப் பணிகள் அர்ப்பணிப்பு விழா, புதிய நலத்திட்ட பணிகளுக்கான தொடக்க விழா மற்றும் தேசிய அளவில் விளையாட்டு போட்டிகள் வெற்றி பெற்ற மாணவ- மாணவிகளுக்கு பாராட்டு விழா பள்ளி தாளாளர் ஸ்டாலின் ஜோன்ஸ் தலைமையில் நடைபெற்றது.
இந்நிகழ்ச்சியில் தென்னிந்திய திருச்சபை வேலூர் பேராயர் ஹென்றி சர்மா நித்தியானந்தம் அவர்கள் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு கணினி ஆய்வகம், பெண் மாணவிகள் கழிவறை ஆகியவற்றை திறந்து வைத்தும்,புதிய நூலகம், மாணவர் மற்றும் ஆசிரியர் ஓய்வரைகள், பொன்விழா நுழைவு வாயில் உள்ளிட்ட திட்டங்களை தொடங்கி வைத்தார். இதனைத் தொடர்ந்து மாவட்ட மாநில மற்றும் தேசிய அளவில் பல்வேறு விளையாட்டு போட்டிகளில் வெற்றி பெற்ற ஒய்க்காப் மேல்நிலைப்பள்ளி மாணவ- மாணவிகளுக்கு சான்றிதழ்களை வழங்கி பாராட்டினார்.
இதனைத் தொடர்ந்து செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த வேலூர் பேராயர் ஹென்றி சர்மா நித்தியானந்தம் அவர்கள் அரசு பள்ளிகளுக்கு வழங்குவதைப் போல் அரசு உதவி பெறும் தனியார் பள்ளியில் பயிலும் பெண் பிள்ளைகளுக்கும் ஆயிரம் ரூபாய் நிதி வழங்கும் தமிழ்நாடு முதலமைச்சருக்கு வேலூர் பேராயத்தின் சார்பில் நன்றிகளைத் தெரிவித்துக் கொள்வதாகவும், மேலும் அரசு பள்ளிக்கு ஒதுக்கும் நிதிகளை போல் தனியார் பள்ளிகளுக்கும் தமிழ்நாடு அரசு நிதியை ஒதுக்க வேண்டும் என கோரிக்கை வைத்தார். தொடர்ந்து பேட்டியளித்த அவர் அரசு உதவி பெறும் பள்ளியான ஒய்க்காப் மேல்நிலைப்பள்ளியில் வகுப்பறை கட்டிடத்திற்கு நிதி ஒதுக்கீடு செய்வதாக அறிவித்த விக்கிரவாண்டி சட்டமன்ற உறுப்பினர் அன்னியூர் சிவா அவர்களுக்கு நன்றிகளையும் பாராட்டுகளையும் தெரிவித்தார். மேலும் வேலூர் பேராயத்தின் கீழ் செயல்படும் பள்ளிகளில் பயின்று விளையாட்டுப் போட்டிகளில் வெற்றி பெறும் மாணவர்களின் நலனில் அக்கறை கொண்டு அவர்கள் பள்ளியை விட்டுச் சென்றாலும் விளையாட்டுத்துறையில் அவர்கள் மேலும் வளர்ச்சி பெற வேலூர் பேராயம் தேவையான உதவிகளை செய்து தொடர்ந்து உறுதுணையாக இருக்கும் என்றும் தெரிவித்தார்.
*பேட்டி:*
1.ஹன்றி சர்மா நித்தியானந்தம்- வேலூர் பேராயர், தென்னிந்திய திருச்சபை.
கருத்துரையிடுக