செஞ்சியில், பிரசித்தி பெற்ற ஸ்ரீ செல்வ விநாயகர் புத்தாண்டையொட்டி வெள்ளி கவசத்தில் பக்தர்களுக்கு காட்சி



செஞ்சியில், பிரசித்தி பெற்ற ஸ்ரீ செல்வ விநாயகர் புத்தாண்டையொட்டி வெள்ளி கவசத்தில் பக்தர்களுக்கு காட்சி.

விழுப்புரம் மாவட்டம் செஞ்சி பெரியகரம் பகுதி காந்தி பஜாரில் அமைந்துள்ள பிரசித்தி பெற்ற அருள்மிகு ஸ்ரீ செல்வ விநாயகர் ஆலயத்தில், 2025 ஆம் ஆண்டு ஆங்கில புத்தாண்டையொட்டி இன்று (சனவரி 01, புதன்) மூலவர் செல்வ விநாயகருக்கு பால், தயிர், சந்தனம், பன்னீர் உள்ளிட்ட பல்வேறு வாசனை பொருட்கள் கொண்டு சிறப்பு அபிஷேக பூசை செய்து வெள்ளி கவசம் அணிவிக்கப்பட்டு, அருகம்புல் மற்றும் புதிய ரூபாநோட்டு மாலை அலங்காரம் செய்து தீபாராதனை ஏற்றப்பட்டது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். அனைவருக்கும் அன்னம் பிரசாதமாக வழங்கப்பட்டது.

விழுப்புரம் மாவட்ட செய்தியாளர்: தமிழ். மதியழகன். 

Post a Comment

புதியது பழையவை