விழுப்புரம் மாவட்டம் செஞ்சி இராஜாதேசிங்கு அரசு ஆண்கள் மேல்நிலை பள்ளி மற்றும் பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் அறிவழகன் நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார். அப்போது பள்ளியில் மாணவர்களின் பாதுகாப்பு வசதிகள், குடிநீர், சுகாதாரம் குறித்தும், பள்ளி வளாகத் தூய்மை மற்றும் 10,12 ஆம் வகுப்புக்கான தேர்ச்சி விகிதம் குறித்தும் விரிவான ஆய்வு மேற்கொண்டார்.
ஆய்வின் போது இராஜாதேசிங்கு அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் சத்தியமூர்த்தி, பெண்கள் மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் (பொறுப்பு) செந்தில்குமார், பள்ளி துணை ஆய்வாளர் விநாயகமூர்த்தி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
விழுப்புரம் மாவட்ட செய்தியாளர்: தமிழ். மதியழகன்.
கருத்துரையிடுக