விழுப்புரம் மாவட்டம் செஞ்சியில் 36 வது சாலை பாதுகாப்பு மாத விழாயொட்டி தலைகவசம் மற்றும் சாலைபாதுகாப்பு விழிப்புணர்வு பேரணி செஞ்சி மோட்டார் வாகன ஆய்வாளார் முருகவேல் தலைமையில் நடைபெற்றது.
இந்த சாலை பாதுகாப்பு பேரணியை செஞ்சி காவல் துணை கண்காணிப்பாளர் கார்திகப்ரியா கொடியசைத்து துவங்கிவைத்தார்.
முன்னதாக போக்குவரத்து காவல் ஆய்வாளர் அப்பாண்டைராஜ் சாலை பாதுகாப்பு விழிப்புணர்வில் கலந்து கொண்டவர்களுக்கு சாலைபாதுகாப்பு மற்றும் தலைகவசம் குறித்து விளக்க விழிப்புணர்வும் வாகன ஓட்டிகளுக்கான அறிவுரைகளையும் வழங்கினார். மேலும் சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு துண்டுபிரசுரங்ள் வழங்கப்பட்டது.
விழிப்புணர்வு பேரணியானது செஞ்சி சங்கராபரணி ஆற்றங்கரை யோக முனீஸ்வரர் ஆலயம் அருகே தொடங்கப்பட்டு செஞ்சி நான்கு முனை சந்திப்பு, காந்தி பஜார் உள்பட முக்கிய சாலைகள் வழியாக ஹெல்மெட் அணிந்து இருசக்கர வாகனத்தில் வாகன ஓட்டிகள் மற்றும் பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.
விழுப்புரம் மாவட்ட செய்தியாளர்: தமிழ். மதியழகன்.
கருத்துரையிடுக