வல்லம் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் ஒன்றியக் குழு கூட்டம்!

விழுப்புரம் மாவட்டம் வல்லம் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் ஒன்றியக் குழு கூட்டம் சனவரி 24, வெள்ளியன்று நடைபெற்றது.

வல்லம் வட்டார வளர்ச்சி அலுவலர்கள் முன்னிலையில் நடைபெற்ற இக்கூட்டத்தில் ஊராட்சி ஒன்றியக் குழு பெருந்தலைவர் தலைவர் அமுதாரவிக்குமார் தலைமையேற்றார். இதில் பசுமை வீடு, சாலை வசதி, குடி நீர் உள்ளிட்ட பல்வேறு வளர்ச்சி பணிகள் குறித்து விவாதிக்கப்பட்டு தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. 

மேலும் 27, 28 ஆம் தேதிகளில் விழுப்புரம் மாவட்டத்திற்கு வருகை தரும் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு வல்லம் ஒன்றியக்குழு சார்பில் சிறப்பான வரவேற்பு அளிப்பது குறித்தும், முதல்வரின் நிகழ்ச்சிகளில் பங்கேற்பது குறித்தும் முடிவு செய்யப்பட்டது. 

இதனையடுத்து தமிழ் நிலப்பரப்பில் 5,300 ஆண்டுகளுக்கு முன்பே இரும்பு உருக்கு தொழில் நுட்பம் தமிழ்நிலத்தில் இருந்துதான் அறிமுகமாகி உள்ளதை ஆதாரபூர்வமாக அறிவித்த முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு இக்கூட்டத்தில் நன்றி தெரிவித்தும் சிறப்பு தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

கூட்டத்தில் ஊராட்சி ஒன்றியக்குழு துணை தலைவர் மலர்விழி அண்ணாதுரை மற்றும் கோபால், ஏழுமலை, பத்மநாபன், பிரபாகரன், சிலம்பரசி பாண்டியன், விஜயா உள்ளிட்ட ஒன்றியக்குழு உறுப்பினர்கள் பலர் கலந்து கொண்டனர்.

விழுப்புரம் மாவட்ட செய்தியாளர்: தமிழ். மதியழகன்.

Post a Comment

புதியது பழையவை