விழுப்புரம் மாவட்டம் திண்டிவனம் வட்டம் வெள்ளமேடு பேட்டை ஊராட்சிக்குட்பட்ட அங்கன்வாடி மையத்தில், வெளிநாடு வாழ் தமிழர் நல சங்கம் மற்றும் அறக்கட்டளை சார்பில் இன்று 76 வது குடியரசு தின விழா மிக சிறப்பாக கொண்டாடப்பட்டது.
விழாவில் வெளிநாடு வாழ் தமிழர் நல சங்க மாநிலத் துணைத் தலைவர் LKM. நூருல்லா தேசியக் கொடியை ஏற்றி வைத்து இனிப்புகள் வழங்கினார். மேலும், அங்கன்வாடி மைய பொறுப்பாளர்களின் வேண்டுகோளுக்கு இணங்க அம்மையத்தில் உள்ள சுமார் 25 குழந்தைகளுக்கு தேவையான உபகரணங்கள் மற்றும் பிஸ்கட் வழங்கப்பட்டது.
இந்நிகழ்வில் விழுப்புரம் மாவட்ட துணைத் தலைவர் KAS. சதாம் உசேன், மாவட்ட துணை செயலாளர் KGP. மணிகண்டன், மாவட்ட ஊடக செயலாளர் தமிழ். மதியழகன், அங்கன்வாடி பொறுப்பாளர் யுவராணி, சமையலர் சக்தி மற்றும் கிராம பொதுமக்கள் கலந்து கொண்டனர்.
விழுப்புரம் மாவட்ட செய்தியாளர்: தமிழ். மதியழகன்.
கருத்துரையிடுக