சமூக ஆர்வலர் சந்திரசேகர் சேலையூர் சீயோன் தனியார் பள்ளியில் பயின்றுவரும் தனது மகள் பிறந்த நாளையொட்டி, திருவஞ்சேரி அரசு பள்ளி மாணவ, மாணவிகளுக்கு சிற்றுண்டி வழங்கினார்.
செங்கல்பட்டு மாவட்டம் தாம்பரம் தாலுகா சேலையூர் சீயோன் மெட்ரிக் மேல்நிலை தனியார் பள்ளியில் 12 ஆம் வகுப்பு பயின்று வரும் மாணவி பிரியதர்ஷினியின் பிறந்த நாளை முன்னிட்டு, திருவஞ்சேரி அரசினர் மேல்நிலைப் பள்ளியில் 2024 - 2025 ஆம் கல்வி ஆண்டிற்கான பொதுத்தேர்வையொட்டி 10 மற்றும் 12 ஆம் வகுப்பு மாணவ, மாணவிகளுக்கு காலை, மாலை சிறப்பு வகுப்பு நடத்தப்பட்டு வருவதை அறிந்து சிறப்பு வகுப்பு பயிலும் மாணவ, மாணவிகள் சோர்வில்லாமல் கல்வியில் கவனம் செலுத்தும் வகையில், இன்று பள்ளி தலைமை ஆசிரியரியை புஷ்பா, அமுதம் ரிப்போர்ட்டர் பருவ இதழின் ஆசிரியரும், நிறுவனருமான டாக்டர். வாஞ்சிநாதன் முன்னிலையில், பிறந்த நாள் காணும் மாணவி பிரியதர்ஷினியின் தந்தையும், அமுதம் ரிப்போர்ட்டர் பருவ இதழின் நிர்வாக தலைமை நிருபரும் சமூக ஆர்வலருமான M.சந்திரசேகர் சிற்றுண்டியாக 30 கிலோ கொண்ட கடலை மற்றும் பிஸ்கட்டுகள் மாணவ, மாணவிகளுக்கு வழங்கினார்.
பெற்றோர்கள் தங்களது பிள்ளைகளின் பிறந்தநாளை ஆடம்பரமாக கொண்டாடும் இக்காலகட்டத்தில் தன் பிள்ளையின் பிறந்தநாளில் எளிமையான முறையில் பள்ளி மாணவ, மாணவிகளின் நலனை கருத்தில் கொண்டு சிற்றுண்டி வழங்கிய சமூக ஆர்வலர் சந்திரசேகருக்கு அப்பள்ளி தலைமை ஆசிரியர் மாணவர்கள், ஆசிரியர்களின் சார்பாக நன்றிகலந்த வாழ்த்துக்களை தெரிவித்தார். மேலும் தலைமையாசிரியர், ஆசிரியர்கள் மற்றும் பள்ளி மாணவ, மாணவிகள் என அனைவரும் பிறந்த நாள் விழா காணும் மாணவி பிரியதர்ஷினிக்கு பிறந்தநாள் வாழ்த்துகளை தெரிவித்துக் கொண்டனர்.
நிகழ்வில் சமூக ஆர்வலர்கள் செல்வாபிரியன், வெங்கடேசன் மற்றும் தன்னார்வலர் மாணவி ஹன்சிகா ஆகியோர் கலந்துக்கொண்டனர்.
கருத்துரையிடுக