விழுப்புரம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் விழுப்புரம் மாவட்டத்தின் 23 ஆவது பதிய மாவட்ட ஆட்சியராக S. ஷேக் அப்துல் ரகுமான் இன்று(பிப். 5, புதன்) பொறுப்பேற்றுக்கொண்டார். பொறுப்பேற்றதை தொடர்ந்து ஆட்சியர் அலுவலக வளாகத்தில் மரக்கன்று ஒன்றை நட்டார்.
அப்போது பத்திரிகையாளர்கள் சந்திப்பில் விழுப்புரம் மாவட்ட மக்களுக்கான எந்த குறைபாடாக இருந்தாலும் என்னை நேரடியாக தொடர்பு கொள்ளலாம் எனவும், விழுப்புரம் மாவட்டம் விவசாயம் சார்ந்த மாவட்டம் என்பதால் விவசாயம் சார்ந்த தொழில்களில் கவனம் செலுத்தப்படும் என்றார். மேலும், காட்டு நாயக்கன் சான்றிதழ் வேண்டி விண்ணப்பித்தவர்களுக்கு 3 மாதங்களுக்குள் சான்றிதழ் வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று உறுதி அளித்துள்ளார்.
இதனையடுத்து விழுப்புரம் மாவட்டத்தில் மினி பேருந்துகள் புதிய விரிவான திட்டம் 2024ன் கீழ் வழித்தட வரைபடங்களுடன் கூடிய விண்ணப்பங்களை நிபந்தனைகளுக்கு உட்பட்டு பொதுமக்கள், மக்கள் பிரதிநிதிகள், தனியார் அமைப்புகள் மற்றும் பேருந்து உரிமையாளர்கள் அந்தந்த வட்டாரப் போக்குவரத்து அலுவலரிடம் சமர்ப்பிக்கலாம் என விழுப்புரம் மாவட்ட ஆட்சித்தலைவர் ஷேக் அப்துல் ரஹ்மான் தெரிவித்துள்ளார்.
விழுப்புரம் மாவட்ட செய்தியாளர்: தமிழ். மதியழகன்.
கருத்துரையிடுக