விழுப்புரம் வடக்கு மாவட்ட திமுக சார்பில் செயற்குழு ஆலோசனை கூட்டம், மாவட்ட துணை செயலாளர் A. ரவிக்குமார் தலைமையில் செஞ்சி திருவண்ணாமலை சாலையில் உள்ள ஒரு தனியார் திருமண மண்டபத்தில் நடைபெற்றது.
கூட்டத்தில் வடக்கு மாவட்ட செயளாலரும் செஞ்சி சட்டமன்ற உறுப்பினர் கே.எஸ். மஸ்தான் கலந்து கொண்டு 2016 ல் விமுப்புரம் வடக்கு மாவட்டத்தில் உள்ள 3 தொகுதியிலும் வெற்றி பெற்றதைப்போல 2026 ல் செஞ்சி, திண்டிவனம், மைலம் ஆசிய மூன்று தொகுதியிலும் கழக நிர்வாகிகள் மற்றும் தொண்டர்களின் அன்போடும் ஆதரவோடும் வெற்றி பெறுவதோடு மட்டும் அல்லாது எதிர்த்து நிற்பவர்கள் டெபாசிட் இழப்பார்கள் எனவும், எதிர்வரும் 2026 சட்டமன்ற தேர்தலில் தமிழகம் முழுவதும் 234 தொகுதிகளிலும் திராவிட முன்னேற்றக் கழக கூட்டணி அமோக வெற்றி பெறுவது உறுதி எனவும் நாம் அதற்கு முனைப்புடன் செயல்பட வேண்டும் என சிறப்புரையாற்றினார்.
மேலும் இச்செயறகுழு ஆலோசனை இக்கூட்டத்தில்,
* 13.02.2025 அன்று செஞ்சி சட்டமன்ற தொகுதி உறுப்பினர் கே. எஸ். மஸ்தான் மீண்டும் விழுப்புரம் வடக்கு மாவட்ட செயலாளராக ஆறிவித்தமைக்கு திமுக தலைவர், தமிழக முதல்வர் ஸ்டாலின், துணை முதல்வர் உதயநிதிக்கு நன்றி பாராட்டியும்,
* வருகிற மார்ச் 1 ல் முதலமைச்சர் மு. க. ஸ்டாலின் பிறந்த நாளை விழுப்புரம் வடக்கு மாவட்ட திமுக சார்பாக செஞ்சி, மைலம், திண்டிவனம் ஆகிய சட்டமன்ற தொகுதிகளுக்கு உட்பட்ட அனைத்து ஒன்றியங்களில் உள்ள ஊராட்சி கழகங்களிலும், நகர, பேரூர், வார்டுகளிலும் ஏழைமக்களுக்கு நலத்திட்ட உதவிகள் மற்றும் இனிப்புகள், பள்ளி மாணவர்களுக்கு நோட்டுபுத்தங்கள் வழங்கி சிறப்பாக கொண்டாட வேண்டும் உள்பட ஐந்து தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.
இந்நிகழ்வில் திமுக மாநில, மாவட்ட, வட்ட, ஒன்றிய, வார்டு நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.
விழுப்புரம் மாவட்ட செய்தியாளர்: தமிழ். மதியகன்.
கருத்துரையிடுக