செங்கல்பட்டு: பதுவஞ்சேரி அரசு ஆதிதிராவிடர் மேல்நிலைப்பள்ளியில் சிறப்பு வகுப்பு மாணவர்களுக்கு சமூக ஆர்வலரால் சிற்றுண்டி!

 

   செங்கல்பட்டு: பதுவஞ்சேரி அரசு ஆதிதிராவிடர் மேல்நிலைப்பள்ளியில் சிறப்பு வகுப்பு பயிலும் மாணவர்களுக்கு சிற்றுண்டி வழங்கிய சமூக ஆர்வாலர். பள்ளி தலைமை ஆசிரியர் பாராட்டி வாழ்த்தினார்.

செங்கல்பட்டு மாவட்டம் தாம்பரம் அருகே பதுவஞ்சேரி அரசு ஆதிதிராவிடர் மேல்நிலைப்பள்ளியில் 2024 - 2025 ஆம் கல்வி ஆண்டிற்கான பொதுத்தேர்வையொட்டி 10 மற்றும் 12 ஆம் வகுப்பு மாணவ, மாணவிகளுக்கு காலை, மாலை சிறப்பு வகுப்பு நடத்தப்பட்டு வருகிறது. 

சிறப்பு வகுப்பு பயிலும் மாணவ, மாணவிகள் சோர்வில்லாமல் கல்வியில் கவனம் செலுத்தும் வகையில், பிப்.1, சனிக்கிழமை இன்று சிற்றுண்டியாக 30 கிலோ கொண்ட கடலை மற்றும் பிஸ்கட்கள் சமூக ஆர்வலரும், அமுதம் ரிப்போர்ட்டர் மாத இதழின் நிர்வாக தலைமை நிருபருமான M.சந்திரசேகர் வழங்கினர்.

இந்த நிகழ்வில் சமூக ஆர்வலரும் பத்திரிகையாளருமான D. அல்லாபகேஷ் மற்றும் பள்ளி ஆசிரியர்கள் கலந்துக கொண்டனர். மேலும் பள்ளி தலைமையாசிரியர் எங்கள் பள்ளி குழந்தைகளுக்கு சரியான நேரத்தில் சிற்றுண்டி வழங்கிய சமூக ஆர்வலர் சந்திரசேகர் அவர்களுக்கு பள்ளியின் குழந்தைகள் சார்பாகவும், ஆசிரியர்களின் சார்பாகவும் மனமார்ந்த நன்றிகளையும் வாழ்த்துகளையும் தெரிவித்துக்கொண்டார்.

Post a Comment

புதியது பழையவை