செங்கல்பட்டு மாவட்டம் தாம்பரம் கிழக்கு அரசினர் பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் சமூக ஆர்வலரால் தனது குழந்தையின் பிறந்த நாளை முன்னிட்டு சிறப்பு வகுப்பு பயிலும் மாணவர்களுக்கு சிற்றுண்டி வழங்கப்பட்டது.
சமூக ஆர்வலரும் பத்திரிகையாளருமான வெங்கடேசன் தனது மகன் பிரனவ்-வின் பிறந்த நாளை (12.02.2025) முன்னிட்டு பிப். 14, வெள்ளியன்று கிழக்கு தாம்பரம் அரசினர் பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் 10 மற்றும் 12 ஆம் வகுப்பு காலை, மாலை சிறப்பு வகுப்பு பயிலும் மாணவர்களுக்கு சிற்றுண்டியாக 30 கிலோ கொண்டய் கடலை மற்றும் பிஸ்கட்கள் தலைமையாசிரியர் மற்றும் உடற்கல்வி இயக்குனர் ஆகியோர் முன்னிலையில் பள்ளி மாணவிகளுக்கு வழங்கப்பட்டது. நிகழ்வில் சமூக ஆர்வலரும் பத்திரிகையாளருமான ம.சந்திரசேகர் மற்றும் தன்னார்வலர் கல்லுரி மாணவி லீமா கலந்துக்கொண்டனர்.
குழந்தையின் பிறந்தநாளை முன்னிட்டு பள்ளி பிள்ளைகளுக்கு சிற்றுண்டி வழங்கிய வெங்கடேசன் அவர்களுக்கு பள்ளியின் சார்பாகவும் ஆசிரியர்களின் சார்பாகவும் மனம்நிறைந்த நன்றிகளையும், வாழ்த்துகளையும் பள்ளி தலைமையாசிரியர் தெரிவித்துக்கொண்டார். மேலும் பிறந்த நாள் கொண்டாடிய குழந்தை பிரனவ்வுக்கு தலைமையாசிரியை, பள்ளி ஆசிரியர்கள் மற்றும் பள்ளி மாணவிகள் அனைவரும் பிறந்தநாள் வாழ்த்துகளை தெரிவித்துக்கொண்டனர்.
தலைமை செய்தியாளர்: சந்திரசேகர்.
கருத்துரையிடுக