சமூக ஆர்வலர் வெங்கடேசன் தனது தந்தையின் நினைவு தினத்தை முன்னிட்டு பள்ளி மாணவர்களுக்கு சிற்றுண்டி வழங்கினார்.
செங்கல்பட்டு மாவட்டம் புதுப்பாக்கம் அரசினர்(ஆதிந) உயர்நிலைப் பள்ளியில் சமூக ஆர்வலர் வெங்கடேசன், முத்துகுமார் ஆகியோரின் தந்தை ராமுதேவர் அவர்களின் நினைவு நாளை முன்னிட்டு, பிப். 15, சனிக்கிழமையன்று 2024 - 2025 ஆம் கல்வி ஆண்டிற்கான பொதுத்தேர்வு எழுதவிருக்கும் 10 ஆம் வகுப்பு மாணவ, மாணவிகள் காலை, மாலை சிறப்பு வகுப்பு பயின்று வரும் நிலையில் சோர்வில்லாமல் கல்வியில் கவனம் செலுத்தும் வகையில், சிற்றுண்டியாக கொண்டை கடலை, பச்சை பயிறு மற்றும் பிஸ்கட்டுகள் மாணவ, மாணவிகளுக்கு அப்பள்ளி உதவி தலைமை ஆசிரியரியை முன்னிலையில் சமூக ஆர்வலர் வெங்கடேசன் வழங்கினார். மேலும் கல்வியின் முக்கியத்துவம், பொதுத் தேர்வில் எவ்வாறு அதிக மதிப்பெண் பெறுவது குறித்து மாணவர்களுக்கு எடுத்துத்தார்.
சமூக ஆர்வலர் தனது தந்தையின் நினைவு தினத்தையொட்டி ஒவ்வொரு ஆண்டும் ஏழை மக்களுக்கு உணவு அளித்து வரும் நிலையில் தற்போது மாணவர்களின் நலனில் கவனம் செலுத்தி அவர்களுக்கு சிற்றுண்டி வழங்கிய சமூக ஆர்வலர் வெங்கடேசன், முத்துக்குமார் ஆகியோருக்கு மாணவர்கள் மற்றும் ஆசிரியர்கள் சார்பாக நன்றிகலந்த வாழ்த்துக்களை பள்ளி உதவி தலைமை ஆசிரியர் தெரிவித்துக் கொண்டார்.
இந்நிகழ்வில் சமூக ஆர்வலர், பத்திரிகையாளருமான சந்திரசேகர், தன்னார்வலர் ஹன்சிகா ஆகியோர் கலந்து கொண்டனர்.
தலைமை செய்தியாளர்: சந்திரசேகர்.
கருத்துரையிடுக