செஞ்சியில் அன்னை ஓம் பவதாரணி சித்தாஸ்ரமம் சார்பில் புற்றுநோய் மருத்துவ முகாம்!


விழுப்புரம் மாவட்டம் செஞ்சி அன்னை ஓம் பவதாரணி சித்தாஸ்ரமம் சார்பில் புற்றுநோய் பரிசோதனை மற்றும் விழிப்புணர்வு முகாம் நடைபெற்றது. முகாமினை அன்னை ஓம் பவதாரணி தலைமையில் செஞ்சி சட்டமன்ற உறுப்பினர் கே.எஸ். மஸ்தான் கலந்து கொண்டு குத்துவிளக்கு ஏற்றி தொடங்கி வைத்தார்.


முகாமில் கலந்து கொண்டவர்களுக்கு புற்றுநோய் சிகிச்சை மருத்துவ நிபுணர் டாக்டர் எஸ். ஜி. ரமணன் கேன்சர் பவுண்டேஷன் மருத்துவ குழுவினரால்
முறையான மருத்துவ பரிசோதனை செய்யப்பட்டது மேலும், புற்றுநோய் என்றால் என்ன, புற்றுநோயின் ஆரம்ப நிலை அதன் அறிகுறிகள் மற்றும் புற்றுநோய் தடுப்பு வழிமுறைகள் குறித்து விழிப்புணர்வு அளிக்கப்பட்டது.

முகாமில் செஞ்சி பேரூராட்சி மன்ற தலைவர் மொக்தியார் அலி, மருத்துவ நிபுணர் டாக்டர் கனி மற்றும் மருத்துவர்கள், செவிலியர்கள் உதவியாளர்கள் கலந்து கொண்டனர்.

விழுப்புரம் மாவட்ட செய்தியாளர்: தமிழ். மதியழகன்.

Post a Comment

புதியது பழையவை