*ஆயிரம் ரூபாய் நிதி வழங்கிவிட்டு அனைத்து வரியையும் உயர்த்தி விட்டார்கள் என செஞ்சி கிழக்கு ஒன்றிய அதிமுக சார்பில் புரட்சித்தலைவி ஜெயலலிதா பிறந்தநாள் விழா நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சியில் முன்னாள் அமைச்சர் சி.வி. சண்முகம் பேச்சு.*
விழுப்புரம் மாவட்டம் செஞ்சி கிழக்கு ஒன்றிய அதிமுக சார்பில் புரட்சித்தலைவி அம்மா அவர்களின் 77-வது பிறந்தநாள் விழாவையொட்டி விநாயகபுரம் பகுதியில் நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சி ஒன்றிய கழக செயலாளர் க. சோழன் தலைமையில் நடைபெற்றது.
இந்நிகழ்ச்சியில் அதிமுக மாநிலங்களவை உறுப்பினரும், முன்னாள் அமைச்சரும், அதிமுக விழுப்புரம் மாவட்ட கழக செயலாளருமான சி.வி. சண்முகம் அவர்கள் கலந்து கொண்டு கழக கொடி ஏற்றியும், புரட்சித் தலைவர் புரட்சித்தலைவி திருவுருவப் படங்களுக்கு மலர் தூவி மரியாதை செலுத்தினார். பின்னர் ஆயிரத்துக்கும் மேற்பட்ட மகளிர்களுக்கு தையல் எந்திரம், கேஸ் அடுப்பு, பால்குடம், புடவை உள்ளிட்ட பல்வேறு நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.
இதனைத் தொடர்ந்து பேசிய முன்னாள் அமைச்சர் சி.வி.சண்முகம் கடந்த நான்கு ஆண்டு திமுக ஆட்சியில் கொடுத்த வாக்குறுதிகளை நிறைவேற்றவில்லை என்றும், அதிமுக ஆட்சியில் செயல்படுத்தப்பட்ட தாலிக்கு தங்கம் உள்ளிட்ட பல்வேறு நல்ல திட்ட உதவிகளை நிறுத்திவிட்டார்கள் என்றும் இந்த ஆட்சியில் அனைத்து வரிகளும் விலைவாசியும் உயர்ந்து விட்டதாகவும், குறிப்பாக வீட்டில் உள்ள மகளிர் குடிக்கும் தண்ணீருக்கும் வரி உயர்த்தி விட்டார்கள் கணவன்மார்கள் குடிக்கும் டாஸ்மாக் தண்ணீருக்கும் விலை ஏற்றி விட்டார்கள் என விமர்சனம் செய்தார். ஆயிரம் ரூபாய் மகளிர் உதவி தொகை வழங்கி அனைத்து பொருட்களின் விலையும் ஏற்றி மக்களை திமுக அரசு ஏமாற்றி வருவதாகவும் வரும் தேர்தலில் விழிப்புடன் இருந்து திமுகவின் பொய்களை நம்பி ஏமாறாமல் இரட்டை இலை சின்னத்தில் வாக்களிக்க வேண்டும் என கேட்டுக் கொண்டார்.
இந்நிகழ்ச்சியில் மாவட்ட எம்ஜிஆர் இளைஞர் அணி செயலாளர் வி ஆர் பிரித்விராஜ், மாவட்ட வழக்கறிஞர் பிரிவு செயலாளர் அருண்தத்தன், ஜெயபால், ஒன்றிய கவுன்சிலர்கள் துரை, சவிதா கிருஷ்ணராஜ் உள்ளிட்ட அதிமுக நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.
கருத்துரையிடுக