விழுப்புரம் மாவட்டத்தில் 15 மற்றும் 25 ஆண்டுகள் பணியின் போது தண்டனை இல்லாமல் சிறப்பாக பணிபுரிந்த காவலர்களுக்கு மத்திய அரசால் வழங்கப்படும் 2020 - 2021 ஆம் ஆண்டிற்கான (ATI UTKRISHT SEVA PADAK / UTKRISHT SEVA PADAK) பதக்கங்கள் காவல் ஆய்வாளர் கிருஷ்ணமூர்த்தி (Rtd), (AUSP பதக்கம்), காவல் தனி பிரிவு உதவி ஆய்வாளர் ராதாகிருஷ்ணன் (AUSP பதக்கம்), விழுப்புரம் நகர காவல் நிலைய காவல் உதவி ஆய்வாளர் கந்தசாமி (USP பதக்கம்), விழுப்புரம் ஆயுதப்படை தலைமை காவலர் அசோக்குமார் (USP பதக்கம்) ஆகிய நான்கு நபர்களை இன்று மாவட்ட காவல் அலுவலகத்தில் நேரில் அழைத்து மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சரவணன் பதக்கங்கள் அணிவித்து பாராட்டி வாழ்த்துகளை தெரிவித்தார்.
விழுப்புரம் மாவட்ட செய்தியாளர்: தமிழ். மதியழகன்.
கருத்துரையிடுக