விழுப்புரம் மாவட்டம், மேல்மலையனூர் வட்டம், செவலபுரை அருள்மிகு பிரஹன்நாயகி சமேத அகஸ்தீஸ்வரர், மேலச்சேரி அருள்மிகு பிரகன்நாயகி சமேத மத்தளேஸ்வரர் ஆலயங்களில் மாசி மாத தேய்பிறை மஹா பிரதோஷத்தை முன்னிட்டு நேற்று (பிப்.25) செவ்வாய்கிழமை சிறப்பு வழிபாடு நடைபெற்றது. பிரதோஷ வழிபாட்டில் மூலவர் அகஸ்தீஸ்வார், மத்தளேஸ்வார் மற்றும் நந்தி பகவானுக்கு சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டு தீபாராதனை ஏற்றப்பட்டது இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். தொடர்ந்து பக்தர்கள் அனைவருக்கும் பிரசாதம் வழங்கப்பட்டது.
விழுப்புரம் மாவட்ட செய்தியாளர்: தமிழ். மதியழகன்.
கருத்துரையிடுக