விழுப்புரம் மாவட்டம் செஞ்சி அடுத்த மேல்களவாய் கிராமத்தில் அமைந்துள்ள அருள்மிகு ஶ்ரீஉண்ணாமலை அம்பிகா சமேத அருணாச்சலேஸ்வரர் ஆலய மஹா கும்பாபிஷேகம் வெகு விமர்சையாக நடைபெற்றது.
விழுப்புரம் மாவட்டம் செஞ்சி தாலுக்கா மேல்களவாய் கிராமத்தில் அருள்பாலித்து வரும் அருள்மிகு ஸ்ரீ உண்ணாமலை அம்பிகா சமேத ஸ்ரீ அருணாச்சலேஸ்வரர் கோயில் அஷ்டபந்தன மஹா கும்பாபிஷேகம் நடைபெற்றது.
முதற்கால யாக பூஜைகள், யந்திர ஸ்தாபனம், பிம்ப பிரதிஷ்டை, விமான கலச பிரதிஷ்டை ஆகியவை நடைபெற்றது. இரண்டாம் கால யாக பூஜை வேத திருமுறை பாராயணம் மஹா தீபாரதனை ஆகியவை நடைபெற்றது. புதன்கிழமை காலை 6 மணிக்கு மூன்றாம் கால யாக பூஜை, கோ பூஜை, நாடி சந்தானம், மஹா தீபாரதனை ஆகியவை நடைபெற்றது. தொடர்ந்து யாத்ரா தானம் புறப்பாடு நடைபெற்று, ராஜகோபுர கலசலங்களுக்கு புனித நீரை ஊற்றி மஹா கும்பாபிஷேகம் நடைபெற்றது.
இதனை தொடர்ந்து அருள்மிகு உண்ணாமுலை அம்பிகா உடனுறை அருள்மிகு அருணாசலேஸ்வரர், ஸ்ரீவிநாயகர், ஸ்ரீவள்ளி தேவசேனா சமேத ஸ்ரீசுப்பிரமணிய, ஸ்ரீபைரவர், நவகிரமூர்த்திகள் மற்றும் பரிவார மூர்த்திகளுக்கு புனித நீர் ஊற்றப்பட்டு மஹா கும்பாபிஷேகம் நடைபெற்றது.
காலை 10 மணிக்கு சுவாமிகளுக்கு அபிஷேகமும், விசேஷ அலங்காரம் நடைபெற்று மஹா தீபாரதனை நடைபெற்றது. விழாவில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு வழிபாடு செய்தனர். பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. விழா ஏற்பாடுகளை மேல்களவாய் கிராம பொது மக்கள் செய்திருந்தனர்.
கருத்துரையிடுக