கெளரிவாக்கம் சிவா விஷ்ணு ஆலயத்தில் மஹா சிவராத்திரி விழா! சிறப்பு அலங்காரத்தில் சிவா விஷ்ணு!!

 

செங்கல்பட்டு மாவட்டம் தாம்பரம் தாலுகா கெளரிவாக்கம் குருசாமி நகரில் அமைந்துள்ள ஸ்ரீ சிவா விஷ்ணு ஆலயத்தில் நேற்று மாசி 14 (பிப். 26) புதன்கிழமை மஹா சிவராத்திரியை முன்னிட்டு இரவு முழுவதும் நான்கு கால சிறப்பு பூஜைகள் நடைபெற்றது.

மஹா சிவராத்திரி விழாவில் சிவா விஷ்ணு பகவானுக்கு நான்கு கால சிறப்பு பூஜைகள் பால், தயிர், சந்தனம், பன்னீர் உள்ளிட்ட வாசனை பொருட்கள் கொண்டு சிறப்பு அபிஷேகம் செய்து பலவித மலர்களால் அலங்கரிக்கப்பட்டு சிறப்பு ஆராதனையும் நடைபெற்றது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். பக்தர்கள் அனைவருக்கும் இரவு முழுவதும் பிரசாதம் மற்றும் தேநீர் வழங்கப்பட்டது.

தலைமை செய்தியாளர்: சந்திரசேகர்.

Post a Comment

புதியது பழையவை