விழுப்புரம் மாவட்ட காவல்துறை
விழுப்புரம் மாவட்ட ஆயுதப்படையில்
வருடம் தோறும் காவலர்களுக்கு கவாத்து நினைவூட்டும் பயிற்சி நடைபெறும்.
இந்த ஆண்டு கடந்த ஜனவரி மாதம் வருடாந்திர நினைவூட்டு காவத்து பயிற்சி நடைபெற்றது.
இப்பயிற்சியில் கலந்துகொண்ட 250 காவலர்களுக்கு கவாத்து பயிற்சியுடன் கூடுதலாக, சேமிப்பு குறித்தும், சரிவிகித உணவு குறித்தும், உடல் நலன் குறித்தும், வருமான வரி குறித்தும் சிறந்த அனுபவமிக்க விரிவுரையாளர்களின் மூலம் பயிற்சிகள் அளிக்கப்பட்டது.
இந்த கவாத்து நினைவூட்டு பயிற்சியின் நிறைவு விழா இன்று மாவட்ட ஆயுதப்படையில் காவல் கண்காணிப்பாளர்
*திரு.ப.சரவணன்.இ.கா.ப* அவர்கள் தலைமையில் நடைபெற்றது.
இவ்விழாவில் காவலர்களுக்கான விளையாட்டுப் போட்டியில் கிரிக்கெட், வாலிபால், இறகுப்பந்து மற்றும் ஓட்டப்பந்தயங்களில் வெற்றி பெற்ற காவலர்களுக்கும்,
காவலர்களின் குடும்பத்தினர் மற்றும் குழந்தைகளுக்கான விளையாட்டு போட்டியில் ஓட்டப்பந்தயம் மியூசிக்கல் சேர் ஆகியவற்றில் வெற்றி பெற்ற குழந்தைகளுக்கும் காவல் கண்காணிப்பாளர் அவர்கள் பரிசளித்து பாராட்டுக்களை தெரிவித்தார்.
மேலும் மாவட்ட ஆயுதப்படையில் இருசக்கர வாகனங்கள் நிறுத்துமிடம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அவர்களால் திறந்து வைக்கப்பட்டுள்ளது.
விழாவின் இறுதியாக மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அவர்களால் மரக்கன்று நடப்பட்டது.
நிகழ்ச்சியில் கூடுதல் காவல் கண்காணிப்பாளர்கள் திரு.திருமால் அவர்கள், திரு.தினகரன் அவர்கள்,
ஆயுதப்படை காவல் ஆய்வாளர் திரு.அருணாச்சலம், காவல் உதவி ஆய்வாளர்கள் மற்றும் காவலர்கள் கலந்து கொண்டனர்.
கருத்துரையிடுக