செஞ்சியில் மாசிமக விழா! சங்கராபரணி ஆற்றங்கரையில் தீர்த்தவாரி!!

 

விழுப்புரம் மாவட்டம் செஞ்சி கோதண்டராமர் ஆலயம் அருகே சங்கராபரணி ஆற்றங்கரையில் மாசி மகத்தை முன்னிட்டு இன்று சிங்கவரம் அரங்கநாதர், செஞ்சி காமாட்சி அம்மன் உடனுறை ஏகாம்பரேஸ்வரர், பெரியகரம் முத்துமாரியம்மன், உள்பட செஞ்சி மற்றும் அதனை சுற்றியுள்ள கிராமப்புற ஆலங்களிலிருந்து உற்சவமூர்த்திகள் விஜயம் செய்த நிலையில் சங்கராபரணி ஆற்றங்கரையில் தீர்த்தவாரி நடைபெற்றது. இந்த தீர்த்தவாரி நிகழ்ச்சியில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். மேலும் பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.

விழுப்புரம் மாவட்ட செய்தியாளர்: தமிழ். மதியழகன்.

Post a Comment

புதியது பழையவை