விழுப்புரம் மாவட்டம் செஞ்சி காந்தி பஜாரில் உள்ள ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில், ஏப்.2, புதனன்று பள்ளி ஆண்டு விழா தலைமை ஆசிரியர் ஆயிஷா பேகம் தலைமையில் நடைபெற்றது.
விழாவில் பரதம், நாட்டுப்புற நடனம், சிறப்பு பேச்சு, நாடகம், பழமொழி சண்டை, பாடல் என பலதரப்பட்ட கலை நிகழ்ச்சிகளில் மாணவ மாணவிகள் கலந்து கொண்டு அசத்தினர்.
இதில் சிறப்பு அழைப்பாளர்கள் செஞ்சி ஊராட்சி ஒன்றிய குழு பெருந்தலைவர் விஜயகுமார், பேரூராட்சி மன்ற தலைவர் மொத்தியார் அலி ஆகியோர் கலந்து கொண்டு சிறப்புரையாற்றி கலை நிகழ்ச்சிகளில் பங்கேற்ற பள்ளி மாணவ, மாணவிகளுக்கு பரிசினை வழங்கி பாராட்டி, வாழ்த்து தெரிவித்தனர்.
நிகழ்ச்சியில் கல்வி ஆய்வாளர், வட்டார கல்வி அலுவலர், வார்டு கவுன்சிலர்கள், மற்றும் ஆசிரியர்கள், மாணவர்கள், பெற்றோர்கள், பொதுமக்கள் கலந்து கொண்டனர்.
விழுப்புரம் மாவட்ட செய்தியாளர்: தமிழ். மதியழகன்.
கருத்துரையிடுக